பணி வழங்கும் நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) காலி இடங்கள்:
1,124 பதவி: டிரைவர், டிரைவர்-பம்ப்-ஆபரேட்டர் (அதாவது தீயணைப்பு சேவைகளுக்கான
டிரைவர்) பதவிகள். இதில் டிரைவர் பணியிடம் 845, டிரைவர்-பம்ப்-ஆபரேட்டர் பணியிடம்
279 கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம்
பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும்) வயது: 4-3-2025 அன்றைய
தேதிப்படி 21 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு
விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: எழுத்து
தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2025 இணையதள முகவரி: https://cisfrectt.cisf.gov.in/
சுப்ரீம் கோர்ட்டில் பணியிடம்
பணி நிறுவனம்: சுப்ரீம் கோர்ட்டு பணி இடங்கள்: 241 பதவி: ஜூனியர் கோர்ட்டு
அசிஸ்டெண்ட் கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கம்ப்யூட்டரில் ஒரு
நிமிடத்தில் 25 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது: 8-3-2025 அன்றைய
தேதிப்படி 18 வயதுக்கு குறைவாகவோ,30 வயதுக்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது. அரசு
விதிமுறைகளின் படி வயது தளர்வு உண்டு. தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை,
கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி/நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி. தேர்வு முறை: எழுத்து தேர்வு,
தட்டச்சு தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி:
8-3-2025 இணையதள முகவரி: https://www.sci.gov.in/recruitments/
வங்கியில் பணிவாய்ப்பு
பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலி இடங்கள்: 1000
பதவி பெயர்: கடன்
வழங்கும் அதிகாரி (கிரெடிட் ஆபீசர்) கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வயது:
30-11-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 30. அதாவது
30-11-1994-க்கு முன்போ, 30-11-2004-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு
முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை,
மதுரை, திருச்சி, வேலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025 இணையதள முகவரி:
https://www.centralbankofindia.co.in/en/recruitments
என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: பாரத் எலெட்ரானிக்ஸ் லிமிட்டெட் (பெல்) காலி இடங்கள்: 137
(தற்காலிகமானது - 3 ஆண்டுகள் வரை) பதவி: டிரெய்னி என்ஜினீயர்-1, புராஜெக்ட்
என்ஜினீயர்-1 பணி இடம்: பெங்களூரு கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி
என்ஜினீயரிங் படிப்புகளில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள்.
புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க
வேண்டும். வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 32
வயதுக்குட்பட்டவர்களாகவும், டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு 28
வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 10
ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட) தேர்வு முறை: எழுத்து
தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025
இணையதள முகவரி:
https://bel-india.in/job-notifications/
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு
பணி நிறுவனம்: இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) காலி இடங்கள்: 246 பதவி பெயர்: ஜூனியர்
ஆபரேட்டர், ஜூனியர் அட்டன்டெண்ட், ஜூனியர் பிசினஸ் அட்டன்டெண்ட் உள்ளிட்ட பதவிகள்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு.
வயது: 31-1-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள். 3 முதல் 5
வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது
தளர்வு உண்டு. தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, உடல்
தகுதி தேர்வு தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி தேதி:
23-2-2025
இணையதள முகவரி: https://iocl.com/latest-job-opening

Post a Comment