2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கினைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை. 

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை "www.tnhealth.tn.gov.in't என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு "www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 19.11.2024 முதல் 02.12.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




Post a Comment

Previous Post Next Post