காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ப. சிதம்பரம் அவர்களின் சொந்த நிதியில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் ரூ.5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.1.2025) சிவகங்கை மாவட்டம். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நடைபெற்ற விழாவில், விழாவில். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ப. சிதம்பரம் அவர்களின் சொந்த நிதியில் 12 கோடி ரூபாய் செலவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருமதி வளர்தமிழ் நூலகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். 

லக்ஷ்மி திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் செட்டிநாடு கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், கீழ் தளம், தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கம்பர் நூலக அறை, கொல்காப்பியர் அரங்கமும், முதல் தளத்தில் திருவள்ளுவம். இளங்கோவடிகள் நூலக அறைகளும் இணையதள வசதியுடன் கூடிய மின் நூலகம், சிறு கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. 

நூலகத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை வைப்பதற்கான இடம் உள்ளது. மேலும், நூலகத்தில் மின்தூக்கி வசதியும்,  இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலையரங்கக் கருத்தரங்கக் கூடத்திற்கு "வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட. அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் க. ரவி அவர்கள் பெற்றுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, முனைவர் கவிஞர் அண்ணாதாசன் அவர்கள் எழுதிய "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலை முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்கள் வெளியிட, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் க. ரவி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, 

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திருமு.பெ. சாமிநாதன். மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு-ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவவி. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். மாங்குடி. திருமதி தமிழரசி டாக்டர் வி. முத்துராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெ

Post a Comment

Previous Post Next Post