பணத்தாசை - சிறுகதை - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 6 June 2021

பணத்தாசை - சிறுகதை

ஏ ஷர்மிளா திருநெல்வேலி

வியாபாரி ஒருவன் தன் வைரங்கள்  அனைத்தையும் விற்று விட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர் பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்று விடலாம் என்று எண்ணினான். அதனால், ஆற்றில் இறங்கி அதை கடக்க முயற்சித்தான். வெள்ளத்தின் வேகம் அவனை நிலை தடுமாறச் செய்தது. 

PLEASE READ THIS ALSO 


அதனால், தன் மூட் டையை வெள்ளத்தில் தவற விட் டான். உடனே "ஐயோ.... என் மூட்டையை வெள்ளம் அடித்துச் செல்கிறதே! யாராவது காப்பாற்றுங்கள்" என்று கூச்சல் போட்டான். 

சற்று தொலைவில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவனின் காதில் வைர வியாபாரி யின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அங்கு வந்த அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பண மூட்டையை எப்படியோ எடுத்து கரையை அடைந்தான்.

 “ஐயா! இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி கதறினீர் களே, நீங்கள் எங்கு இருக்கிறீர் கள்? உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால், வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை. 

பிறகு தான் மீனவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. “ஐயோ பாவம், அந்த பணக்காரர்! இந்த பண மூட்டைக்குப் பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேன்” என்று அந்த மீன வன் வருந்தினான். 

இப்படித்தான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்டு பிரார்த்திக்காமல் வெறும் பணத்தை மட்டுமே கேட்கிறோம். அதனால், பல நேரங்களில் வாழ்வில் உயிருக்கு சமமான நிம்மதியை இழந்து தவிக்க நேரிடுகிறது.

No comments:

Post a Comment