அனுப்புநர், பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. கடிதம் எண்.19753/அநமு2/2019-1, நாள். 23.12.2019. திருமதி.ஜா. ஆனி மேரி சுவர்ணா, அரசு துணைச் செயலாளர். பெறுநர் 'திரு.R.கலையரசன், எண்.35B, அண்ணாநகர், மேலஉலுார், உலுார் மேற்கு, ஒரத்தநாடு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் - 614904. ஐயா, பொருள்: பள்ளிக்கல்வி விடுமுறை அனுபவிக்கும் அரசு பார்வை: பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் - கோருதல். முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக பெறப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், திரு.R.கலையரசன், மனு நாள் 20.07.2019. பார்வையில் காணும் தங்களது மனுவில் vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ (ஈட்டா) விடுப்பு மகப்பேறு விடுப்பு, கருசிதைவு விடுப்பு போன்ற (சம்பளம் மற்றும் படிகளுடன்) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 (a)ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகல் : முதலமைச்சர் தனிப்பிரிவு, சென்னை-9 தங்கள் நம்பிக்கையுள்ள 6.274/12/19 அரசு துணைச் செயலாளருக்காக

Post a Comment

أحدث أقدم