சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு. பகவந்த் மான் அவர்களின் முன்னிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் "முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை
முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டத்தை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்கின்ற. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ள நம்முடைய திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு. பகவந்த் சிங் மான் உட்பட அனைவருக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
The bond between Tamil Nadu and Punjab has endured for a long time and continues to grow very strong. When Dr. Kalaignar assumed office for the first time as the Chief Minister of Tamil Nadu in 1969, he visited Ludhiana in Punjab. He observed the functioning of the Punjab Agricultural University there. Inspired by its model, he went on to establish the Agricultural University in Coimbatore in 1971.
Today, Honourable Chief Minister of Punjab, Thiru Bhagwant Singh Mann is gracing this event with his presence. Thank you again sir.
கல்வி மட்டுமில்ல, கல்வியுடன் காலை உணவு, கல்விக்கு உதவித்தொகை என்று நம்முடைய திராவிட மாடல் அரசு கல்விக்காக செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை இன்றைக்கு ஒட்டுமொத்த நாடும் பாராட்டி கொண்டிருக்கிறது. நம்முடைய சாதனைத் திட்டங்களை பிற மாநிலங்கள் பாராட்டுவது மட்டுமல்ல. அதை ஃபாலோவும் செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த காலை உணவுத்திட்டத்தை, இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகள் சிலவற்றிலும் இன்றைக்கு பின்பற்ற ஆரம்பத்திருக்கின்றார்கள்.
What we began in 2022 as a pilot project in about 1,500 schools has now been expanded to 37,416 government and government-aided schools across Tamil Nadu, benefiting around 21 lakh students. 21 இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றார்கள். क
1
2
3
இங்கே மாணவர்கள் மட்டுமல்ல. பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிக அளவில் வந்து இருக்கின்றீர்கள். முன்பெல்லாம், பெற்றோர்கள். குறிப்பாக தாய்மார்களுக்கு. காலையில எழுந்து, டிபன் செய்து, மாணவர்களை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று. ஒரே பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருக்கும். ஆனால், இன்றைக்கு அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியிருக்கின்றார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். உங்க பிள்ளைகள் இனி பள்ளியிலேயே ரிலாக்ஸா 260006 சாப்பிட்டு விட்டு, பாடத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார்கள் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். காலை
இது வெறும் வயிற்றுப்பசியை போக்குவதற்க்கான திட்டம் மட்டுமில்ல, இது மாணவர்களுடைய அறிவுப்பசியை போக்குவதற்கான ஒரு மகத்தான திட்டம்.
Our Honourable Chief Minister often says that providing health and education to society empowers people to help themselves and emerge as successful citizens and leaders. Therefore, I am confident that this breakfast scheme will further strengthen our students' ability to emerge as successful individuals in each life.
இங்கே இருக்கின்ற ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு கோரிக்கை. மாணவர்களை படிக்க மட்டுமே சொல்லாமல், விளையாட்டு நேரத்தில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால், மாணவர்களுடைய, உடல் நலம் நன்றாக இருந்தால் தான், அவர்களுடைய மனநலமும் நன்றாக இருக்கும். இந்த காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே மாதிரி இங்கே அதிக அளவில் வந்திருக்கக்கூடிய நம்முடைய மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் அவர்களுடைய உழைப்பு இந்தத் திட்டத்தின் வெற்றியில் மிக, மிக முக்கியமானதாகும். இந்த காலை உணவுத் திட்டத்தை தாய்மை உணர்வோடு சமைத்துத் தருகின்ற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த என் அருமை சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
By providing a healthy breakfast, we are not only addressing malnutrition but also enhancing attendance, concentration, and overall academic performance. This scheme has played a vital role in bridging the gap between disadvantaged and privileged students, ensuring equal opportunities for every child to succeed.
இந்த சிறப்புக்குரிய திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன்.
I welcome Honourable Chief Minister of Punjab Thiru Baghwant Singh Mann அவர்கள் and his wife Tmt. Gurpreet Kaur Madam அவர்கள்,
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அத்தை கனிமொழி கருணாநிதி அவர்களையும்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களையும்,
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு.சேகர்பாபு அவர்களையும்,
மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அக்கா கீதா ஜீவன் அவர்களையும்,
வனத்துறை அமைச்சர் அண்ணன் திரு. ராஜகண்ணப்பன் அவர்களையும்,
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.
அண்ணன் முத்தரசன் அவர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன். மயிலை தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உட்பட மயிலை த.வேலு அவர்கள் அனைத்து உறுப்பினர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன். சட்டமன்ற
சென்னை மாநகராட்சியினுடைய அதேபோல், மாண்புமிகு வணக்கத்திற்குரிய மேயர் சகோதரி பிரியா ராஜன் அவர்களையும், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள் அனைவரையும் வருக. வருக என்று வரவேற்கின்றேன்.
தமிழ்நாடு அரசினுடைய தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களையும்.
சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறையின் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் அவர்களையும்.
அனைத்து அதிகாரிகளையும், பணியாளர்களையும் வருக வருக என வரவேற்கின்றேன்.
திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தினுடைய இயக்குநர் திருமிகு மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் அவர்களையும் வரவேற்று மகிழ்கின்றேன்.
இங்கே வருகை தந்திருக்கக்கூடிய ஆசிரியர் பெருமக்கள். ஆம் ஆத்மி கட்சியினுடைய தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணன் வசீகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.
அன்புக்குரிய மாணவச் செல்வங்களையும், Primay H.M. Sister Regina மற்றும் வந்திருக்கக்கூடிய பெற்றோர்கள். சுய உதவிக்குழு சகோதரிகள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் உட்பட அனைவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.
முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம் இன்றைக்கு புது வரலாறு படைக்கட்டும் நம்முடைய மாணவர்களுடைய கல்வி செழிக்கட்டும்! நன்றி வணக்கம்! என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

إرسال تعليق