ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பட்டதாரிகளுக்கு ஓராண்டுகால அப்ரண்டிஸ் பயிற்சி 

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் ஓராண்டு கால அப்ரண்டிஸ் பயிற்சி பெற பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம் என தென் பிராந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் அறிவித்துள்ளது.

 இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற் சாலையில் பொறியியல் பட்டதாரிகளும் (மெக்கா னிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, சிவில், ஆட்டோ மொபைல்), கலை அறிவியல் பட்டதாரிகளும் (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ) ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறலாம். 

அவர்கள் தங்கள் கல்வித்தகுதியை 2021, 2022, 2023, 2024-ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். 

அதோடு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். + G L 6 தகுதியுடைய பொறியியல் மற்றும் கலை अली का https://nats.education. gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 17-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 தொழில்நிறுவனங்களில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Previous Post Next Post