உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தகுதித் தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடக்கம் அமைச்சர் கோவி.செழியன் தகவல் 
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வாக மாநில அரசு, மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில தகுதித் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 6,7,8 மற்றும் 9-ந்தேதிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்காக மார்ச் மாதம் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post