பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு பிப். 22-இல் தொடக்கம்

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான செய் முறைத் தேர்வு வரும் 22-இல் தொடங்கி 28 வரை நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரி கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  -2025 மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. 

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான அறி வியல் செய்முறைத் தேர்வு வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. 28-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அறிவியல் செய்முறைத் தேர்வுமையங்களாகசெயல்படாத பள்ளிகளின் தேர்வர்கள் பெயர் பட்டியல் (நகல்) மற்றும் வெற்று மதிப்பெண் பட்டியல்களை தொடர்புடைய தேர்வு மைய பள் ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். 

தொடர்ந்து தேர்வு முடிந்த பின்னர், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக ளில் இருந்து செய்முறைத் தேர்வுக் கான மதிப்பெண் பட்டியல்களை தொடர்புடைய அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மார்ச் 4-ஆம் தேதிக்குள் ஒப்ப டைக்க வேண்டும். 

தொடர்ந்து அனைத்து பள்ளிக ளில் இருந்தும் பள்ளி மாணவர்க ளது மதிப்பெண் பட்டியல் பெற் றவுடன் மாவட்ட அரசுத் தேர்வு கள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் ஆன்லைனில் வரும் 28-இல் தொடங்கி, தொடர்ந்து மார்ச் 8 -ஆம் தேதிக்குள் சரிபார்த்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவ லகத்திற்கு அனுப்பி வைக்க உத்தர விட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் செய் முறை நடத்துவதற்கான முன்னேற் பாடு பணிகளில் தலைமை ஆசிரி யர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்.


Post a Comment

أحدث أقدم