Photo by cottonbro studio:
பணி நிறுவனம்: தமிழ்நாடு தபால் துறை பணி இடங்கள்: 2,292 பதவி: கிராமின் டாக் சேவக்
திட்டத்தின் அடிப்படையிலான பணிகள் கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. உள்ளூர்
மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அடிப்படை
கம்ப்யூட்டர் அறிவு பெற்றவராகவும், சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராகவும் இருக்க
வேண்டும். வயது: 3-3-2025 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது: 18,
அதிகபட்ச வயது: 40. அத்துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு
உண்டு. தேர்வு முறை: 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ‘மெரிட் லிஸ்ட்’
வெளியிடப்படும். பின்பு ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-3-2025 இணையதள முகவரி:
https://indiapostgdsonline.gov.in/
ஆசியர் வேலைவாய்ப்புச் செய்திகளை மறக்காமல் படிக்கவும்
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம்
பணி நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை காலி இடங்கள்: 300 பதவி பெயர்: நாவிக் (ஜெனரல்
டூட்டி, டொமெஸ்டிக் பிராஞ்ச்) கல்வி தகுதி: நாவிக் ஜெனரல் டூட்டி (12-ம் வகுப்பில்
கணிதம், இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள், டொமெஸ்டிக்
பிராஞ்ச் (10-ம் வகுப்பு படித்தவர்கள்) வயது: குறைந்தபட்ச வயது: 18; அதிகபட்ச வயது:
22. அதாவது 1-9-2003 முதல் 31-8-2007 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க
வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: கம்ப்யூட்டர்
அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதித்தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவப்பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-2-2025 இணையதள முகவரி:
https://joinindiancoastguard.cdac.in/cgept/upcoming
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி
பணி நிறுவனம்: மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் பணி இடங்கள்: 101 (தற்காலிகமானது -
ஒரு ஆண்டு நீட்டிப்புக்கு உட்பட்டது) பதவி: புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட்
என்ஜினீயர், புராஜெக்ட் டெக்னீஷியன், சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர் பணி இடம்:
சென்னை, டெல்லி, ஐதராபாத், மும்பை, கொச்சி, கோவா, போபால், கார்வர், லட்சத்தீவு.
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., முதுகலைப்பட்டப்படிப்பு,
ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வயது: 20-2-2025 அன்றைய தேதிப்படி புராஜெக்ட்
அசோசியேட், புராஜெக்ட் டெக்னீஷியன் பணிக்கு 30 வயதுக்குட்பட்டவர்களாகவும்,
புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், சீனியர் புராஜெக்ட்
என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு
விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள்
உள்பட) தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025
இணையதள முகவரி: https://careers.cdac.in/
என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: இந்திய கடற்படை காலி பணி இடங்கள்: 270 பதவி பெயர்: பைலட், ஏர்
ஆபரேஷன்ஸ் ஆபீசர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர், லாஜிஸ்டிக்ஸ் உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.டெக். வயது:
பைலட், ஏர் ஆபரேஷன்ஸ் ஆபீசர் (2-1-2001 முதல் 1-1-2007-க்கு இடைப்பட்ட தேதிகளில்
பிறந்தவர்கள்), ஏர் டிராபிக் கண்ட்ரோலர் (2-1-2001 முதல் 1-1-2005-க்கு இடைப்பட்ட
தேதிகளில் பிறந்தவர்கள்), லாஜிஸ்டிக்ஸ் (2-1-2001 முதல் 1-7-2006-க்கு இடைப்பட்ட
தேதிகளில் பிறந்தவர்கள்) தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி
தேதி: 25-2-2025 இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in/
No comments:
Post a Comment