நான் பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். 

குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை. பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு. குழந்தைத் தொழிலாளர். சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு. மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன். 

சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன், பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிசெய்வேன். மாற்றுதிறன்கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறிதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்திக்கொடுப்பேன். 

குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது, நம் குழந்தைகளுக்காக என்பதை செய்வதாகும் உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு முதலீடு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன். குழந்தைநேய சமூகத்தை இணைந்து உறுவாக்குவோம், உறுதிசெய்வோம்.


Post a Comment

Previous Post Next Post