பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பார்வை 5ல் காண் செயல்முறைகளின்  மூலமாக 01.01.2013 நிலவரப்படி  உயர்வு நிலவரப்படி முதல் 01.01.2021 நிலவரப்படி வரை உள்ள மூலமாக கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் விலங்கியல் மற்றும் உயிரியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்யப்படாமல் நிலுவையில் உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பான கருத்துருக்களை கீழ்காண் விவரங்களுடன் உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
1) சார்ந்த ஆசிரியரின் விண்ணப்பம் 

2) தலைமையாசிரியரின் முகப்புக் கடிதம் 

3) பணிவரன் முறை கோரும் கருத்துரு விபரப்படிவம் 

4) பணிக்காலம் கணக்கீட்டுத்தாள் 

5) பணியில் சேர்ந்த நாள் முதல் பணிக்காலம் சரிபார்த்த விபரச் சான்று 

6) தற்செயல் விடுப்பு நீங்கலான பிற விடுப்புகள் விவரம் 

7) பதிவுத் தாள் மற்றும் ஆசிரியரின் பணிப்பதிவேட்டின் முதல் பக்க நகல் 

8) ஆசிரியரின் நியமன ஆணையின் (பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வுக்கான பதிவு ) நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்

 9) கல்விச் சான்றுகளின் நகல்கள் |மற்றும் உண்மைத்தன்மை பதியப்பட்ட பணிப்பதிவேட்டின் பக்க நகல்

Post a Comment

Previous Post Next Post