அமெரிக்க பல்கலை.களில் உயர் படிப்பு: பயிற்சிப் பணிக்கு முக்கியத்துவம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 10 October 2021

அமெரிக்க பல்கலை.களில் உயர் படிப்பு: பயிற்சிப் பணிக்கு முக்கியத்துவம்

அமெரிக்க பல்கலை.களில் உயர் படிப்பு: பயிற்சிப் பணிக்கு முக்கியத்துவம் 


அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் பட்டப்படிப் புகளில் சேர பட்டப்படிப்பின் போது எந்த நிறுவனத்தில் எவ்வளவு சிறப்பாக பயிற்சிப் பணி செய்தீர்கள் என்பது மிகவும் அவசியம் என்று நியூயார்க் ராச்செஸ்டர் தொழில்நுட்ப கழகத்தின் ஆய்வுத்துறை இணைத் தலைவர் ஹெட்வர்ட்ஹென்சல் கூறினார். 

ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத் திரிகை இணைந்து நடத்திய இணைய வழி கருத்தரங்கில், ஹெட்வர்ட் ஹென்சலுடன், வெர்சுஸா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பாலாஜி சீனிவாசன், விப்ரோவின் திறனாளிகள் திரட்டு இயக்குநர் வி.விஸ்வநாதன் மற்றும்ஸ்ரீ இராமச்சந்திராவின் பொறியியல் தொழில் நுட்பத்துறைத் தலைவர் பேராசிரியர் வி.ராஜூ உள்ளிட்டோர் இது பற்றி விவாதித்தனர். 

அமெரிக்காவில் படிக்கும் போது பயிற்சிப் பணி செய்வது சு. 4/16 கல்வியாகக் கருதப்பட்டு, பிறகு வேலை வாய்ப்புக்கு அத்தியாவசியமா கிறது என்று பேராசிரியர் ராஜூ கூறினார். மாணவர்களும், பணியாள் கள் தேவைப்படும் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் தேவையான ஜோடியை நாடுவதால் படிப்புகால பணியிடப்பயிற்சி அதற்கு வழிவ குக்கிறது என்று பாலாஜி சீனிவாசன் தெரிவித்தார். 

கரோனா பெருந்தொற்று காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக விப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த வி. விஸ்வநாதன் கூறினார்.

No comments:

Post a Comment