பி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 'ஜீரோ கவுன்சிலிங்': ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - EDUNTZ

புதிய செய்திகளுக்கு இணைந்திருங்கள்

கல்விச் செய்திகள்

Click Here

தினம் ஒரு தகவல்

Click Here

HEALTH TIPS

Click HereLESSON PLAN GUIDE

Click Here

CEO PROCEEDINGS

Click Here

வேலைவாய்ப்புச் செய்திகள்

Click HereSearch This Blog

Sunday, 10 October 2021

பி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 'ஜீரோ கவுன்சிலிங்': ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) போல் பி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 'ஜீரோ' காலிப்பணியிடங்களாக அறிவித்து, நவ.,1க்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 

அச்சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக டி.இ.ஓ.,க்களுக்கு அனைத்து பணியிடங்களும் காலியாக அறிவிக்கப் பட்ட'ஜீரோ கவுன்சிலிங்' அக்.,12ல் நடத்தப்படவுள்ளது. 

இது பல்வேறு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மை , வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்துள்ளது. இதுபோல் வட்டார கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்), தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை , சிறப்பாசிரியர்களுக்கும் 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment