அரசு பள்ளிகளில் வேளாண் பட்டதாரி காலியிடங்களை நிரப்ப, பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. 

அரசு பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண் அறிவியல் பட்டதாரி பணியிடங்களுக்கும், விரைவில் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், 'அரசு பள்ளிகளில் தேவையான காலி இடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், காலியிடங்களின் விபரங்களை உடனடியாக இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post