தமிழகத்தில் 19 நகரங்களில் நெட் தேர்வு
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கான தேசிய தகுதித் தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் நடக்க வேண்டியவை ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் இந்த தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட தேர்வுக்கு நாடு முழுவதும் 8 லட்சத்து 60 ஆயிரத்து 976 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து, அக்டோபர் மாதம் தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 19 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், கரூர் ஆகிய நகரங்களில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரம் வேண்டுவோர் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق