உலக பெற்றோர் தினம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 25 July 2021

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம்

குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்பவர்கள் பெற்றோர். ஒரு குழந்தையின் முதல் உறவு தாயும், தந்தையும்தான். அவர் களுக்குப் பிறகே உறவினர்களும், நண்பர்களும் வருவார்கள். சிலருக்கு பெற்றோரே நண்பனாக, வழிகாட்டியாக, குருவாக இருந்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகிறார்கள். பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, அன்பு, தியாகத்தைப் போற்ற வேண்டியது அவசியமாகும். 

இதன் காரண மாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை நான்காம் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று உலகம் முழுவதும் 'பெற்றோர் தினம்' கொண்டாடப் படுகிறது. குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக, 1994-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் இதனை அறிவித்தார். பின்பு, 2021-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பெற்றோர் தினத்தை அங்கீகரித்தது. பள்ளியில் சேர்ப்பது முதல் பயிற்சி வகுப்பு களுக்கு கூட்டிச்செல்வது வரை, குழந்தையின் முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவர்கள் பெற்றோர். அவர் களின் அன்பை போற்றும் விதமாக, 'உலகில் உள்ள அனைத்து பெற்றோர்களையும் பாராட்டுங்கள்' என்பதாக, இந்த வருடத்தின் பெற்றோர் தினத்துக் கான கருப்பொருள் அமைந்துள்ளது. 

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடைய கல்விக்காக மட்டும் வருமானத்தில் 60 சதவீதம் செலவு செய்கிறார்கள். சில குடும்பங்களில் கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் அளவு கடந்த அன்பிற்கு எதுவும் ஈடாகாது. அந்த அன்பை உறுதுணையாகக் கொண்டு வாழ்வில் முன்னேறுவோம். பெற்றோரை போற்றிப் பாது காப்போம்..

No comments:

Post a Comment