அகவிலைப்படி உயர்வு அமைச்சரவை முடிவை அமல்படுத்த உத்தரவு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 21 July 2021

அகவிலைப்படி உயர்வு அமைச்சரவை முடிவை அமல்படுத்த உத்தரவு

அகவிலைப்படி உயர்வு அமைச்சரவை முடிவை அமல்படுத்த உத்தரவு 


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 28 சத வீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமல்படுத்து மாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத் திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 11 சதவி தம் உயர்த்தி, 28 சதவீதமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1 கடந்த ஆண்டு ஜூலை 1. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய 3 தவணைகளில் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

நிலுவை காலத்துக்கும் சேர்த்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால், 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான கால கட்டத்துக்கு அகவிலைப்படி நிலுவை வழங்கப்பட மாட்டாது என்றும் அறி இது தொடர்பான உத்தரவை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினங்கள் துறை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. 

அதன்படி, அகவிலைப்படி பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 17 சதவீத அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அலு வல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர் பான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தனித்தனியாக பிறப்பிக் கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment