புதிய வருமான வரி வலைதள செயல்பாடு மேம்பட்டுள்ளது: நிதி அமைச்சகம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 21 July 2021

புதிய வருமான வரி வலைதள செயல்பாடு மேம்பட்டுள்ளது: நிதி அமைச்சகம்

புதிய வருமான வரி வலைதளத்தின் செயல்பாடு தற்போது மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 


 இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மாநிலங்களவையில் எழுத்துபூா்வமான அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: ஜூன் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய வருமான வரி வலைதளத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை இந்திய பட்டய கணக்காளா் மையம் (ஐசிஏஐ), வரித் துறை நிபுணா்கள் மற்றும் வரி செலுத்துவோா் உள்ளிட்ட ஏராளமான பயனாளா்கள் சுட்டிக் காட்டினா். 

சுமாா் 2,000 பிரச்னை தொடா்பாக 700-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. வருமான வரி வலைதளத்தில் உள்ளஇத்தகைய தொழில்நுட்ப குறைபாடு குற்றச்சாட்டை இன்ஃபோஸிஸ் ஏற்றுக் கொண்டு அவற்றை சரி செய்து தரும் பணியில் அந்நிறுவனம் தொடா்ந்து ஈடுபட்டுள்ளது. புதிய வருமான வரி வலைதளத்தின் மெதுவான செயல்பாட்டுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதுடன் வரி செலுத்துவோருக்கு தேவையான முன்பு விடுபட்ட பல அம்சங்கள் தற்போது சோ்க்கப்பட்டு அந்த வலைதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றாா்

No comments:

Post a Comment