தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல் கல்லூரிகளிலும் நடைபெற உள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இதற்காக சான்றிதழ் கேட்டு பலர் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். 

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள வடலூர், சேராக்குப்பம், மருவாய், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் ஆன்லைன் மூலம் சான்றிதழ் கேட்டு பதிவு செய்துள்ளனர். 

மேற்படிப்பை தொடரும் வகையில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் துரிதமாக சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post