இந்திய தேசியக்கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று - ஜூலை 22 - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 21 July 2021

இந்திய தேசியக்கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று - ஜூலை 22

தேசியக் கொடிதான் ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாகவும், போராட்ட வீரர்களின் உயிர்மூச்சாகவும் கருதப்படுகிறது.



தேசியக் கொடிக்காக உயிர் துறந்த குமரன்கள் பலரைக் கண்டது நம் நாடு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அனைத்து மக்களாலும் ஏற்கப்பட்டு தற்போதுள்ள வடிவத்தை பெற்றது.

1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ல் இந்திய தேசியக் கொடி என்ற அங்கீகாரத்தை பெற்றது. 

நம் இந்திய நாட்டின் தேசியக் கொடி மூன்று வண்ணங்களை கொண்டதால், இதனை மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய கொடியை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவின் அடையாளமாய் கம்பீரமாக செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.

இந்திய நாட்டிற்காக அமைக்கப்பட்ட தேசிய கொடி முதன் முதலில் கொல்கத்தாவில் உள்ள க்ரீன் பார்க்கில் ஆகஸ்ட் 07, 1906 ஆண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், விடுதலை போராட்டம் நிறைவுறும் முன்னர், ராஜேந்திர பிரசாத் தலைமையில், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோர் அமைந்த குழுவில், நாட்டின் அடையாளமாக தேசியக் கொடி ஒன்றை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது.

மூன்று நாள் விவாதத்திற்கு பின்னர், அனைவரும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், இந்திய தேசிய காங்கிரசஸ் கட்சியின் கொடியை சில மாற்றங்களுடன் இந்திய தேசிய கொடியாக ஏற்க முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இந்திய தேசியக் கொடி எந்த மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக மதங்களை குறிக்கும் விதத்தில் அமையபெற்ற அனைத்தையும் மாற்றி தற்போதுள்ள வடிவத்தை பெற்றது நம் தேசியக் கொடி. இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட், 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.

No comments:

Post a Comment