IBPS RRB PO, Clerk 2021: பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க - EDUNTZ

Latest

Search here!

Tuesday 8 June 2021

IBPS RRB PO, Clerk 2021: பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க


IBPS RRB PO, Clerk 2021 notification released, registration process to begins: இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைனில் https://www.ibps.in/crp-rrb-x/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் மொத்தம் 10,676 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைனில் https://www.ibps.in/crp-rrb-x/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது அந்த மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

 தகுதிகள்:
வயதுத் தகுதி:
கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2021 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2021 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2021 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
கல்வித் தகுதி:
கிளர்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும். துணை மேலாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு, அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 08.06.2021 ஆகவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 28.06.2021 ஆகவும் ஐபிபிஎஸ் ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ.175 ஆக உள்ளது.
தேர்வு முறை:
கிளர்க் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மட்டுமே உண்டு. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. துணை மேலாளர் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படி நிலைகளில் தேர்வு முறை இருக்கும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு:
கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து தலா 40 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 45 நிமிடங்கள் மட்டுமே. முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு:
கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிளர்க் பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். 

பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அதே நேரம் துணை மேலாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்ற பின், இறுதி பட்டியல் வெளியிடப்படும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வுக்கு பின்னர், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.



No comments:

Post a Comment