எனது புறாக்கள் முல்லா கதைகள் 


முல்லா நஸ்ரூதின் தனது சகோதரர்கள் குறித்து சுகாதார மு அமைச்சகத்தில் புகார் தர சென்றிருந்தார். 

'எனக்கு ஆறு சகோதரர்கள். 

நாங்கள் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வாழ்ந்துவருகிறோம்.

அவர்களிடம் ஏராளமான செல்லப்பிராணிகள் உள்ளன. 

ஒரு சகோதரன் 12 குரங்குகளை வளர்க்கிறான். 

இன்னொரு சகோதரனோ 12 நாய்களை வைத்திருக்கிறான். 

அறையில் காற்றே இல்லை. மிகப் பயங்கரமான சூழல். ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று கேட்டார் முல்லா. 

அறையில் ஜன்னல் உண்டா என்று கேட்டார் சுகாதாரத் துறை ஆணையாளர். 

ஆமாம் என்று பதில் அளித்தார் முல்லா. 

ஜன்னலைத் திறந்தால் காற்று வரும்தானே என்று அறிவுரை சொன்னார் ஆணையாளர். 

முல்லா நஸ்ருதின் பதறிவிட்டார். எனது புறாக்கள் எல்லாம் பறந்துபோய்விடுமே என்று கோபமாகக் கேட்டார்.

Post a Comment

Previous Post Next Post