மாஜி படைவீரர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மானியம் - EDUNTZ

Latest

EDUNTZ

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு

Search This Blog

Thursday, 10 June 2021

மாஜி படைவீரர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மானியம்

மாஜி படைவீரர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மானியம் 

முன்னாள் படைவீர்கள் தொழில்நுட்ப கல்வி தேர்விற்கான மானியங்கள் பெறுவதற்கு விண் ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு: 

முன்னாள் படைவீரர் நலத்துறையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித் துறை யின் மூலம் நடத்தப்படும் தொழில்நுட்ப தேர் வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்கள், குழந்தைகளுக்கு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றமைக்கான செலவினங்கள். அல்லது தமிழ், ஆங்கிலம் தட் டச்சு கீழ்நிலை தேர்ச்சிக்கு 3,000 ரூபாய். தட் டச்சு மேல்நிலை தேர்ச்சிக்கு 5,000 ரூபாய். சுருக் கெழுத்து கீழ்நிலை தேர்ச்சிக்கு 7,000 ரூபாய். 

மேல்நிலை தேர்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகி யவற்றில் எது குறைவோ அதனை மானியமாக வழங்கப்படுகிறது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்க ளின் விதவைகள், குழந்தைகள் இச்சலுகையை பெற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment