ஆன்லைன் அட்மிஷன் பள்ளிகளுக்கு அறிவுரை


கொரோனா பரவல் அதி கமாக உள்ளதால், எல். கே.ஜி., - யு.கே.ஜி., வகுப் புகளுக்கான மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிக ரித்துள்ளது. மஹாராஷ் டிரா மற்றும் கேரளாவில் தொற்று அதிகரிப்பது போல, தமிழகத்திலும் அதிகரிப்பது, சுகாதார துறையினரை கவலைய டைய செய்துள்ளது. இதனால், தொற்று பர வல் தடுப்பு நடவடிக்கை களை, சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 


பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பள்ளி கல்வி துறை மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக ளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

இதில், மாணவர்களை பெற்றோருடன் பள்ளிக்கு வரவைத்து, அவர்களுக்கு சில பள்ளிகள் தேர்வு நடத் துகின்றன. சில பள்ளிகள் மாணவர்களின் பேச்சு, எழுத்து திறனை சோதிக் கின்றன. 

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. 


மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் போது, நுழைவு தேர்வு நடத் தக்கூடாது. தற்போது கொரோனா பரவல் அதி கரித்துள்ளதால், சிறு குழந்தைகளை பள்ளிக்கு நேரில் வரவைத்து, @மாணவர் சேர்க்கையை நடத் தக்கூடாது. அனைத்து பணிகளையும், ஆன்லை னில் முடித்து கொள்ள வேண்டும் என, பள்ளி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


Post a Comment

أحدث أقدم