தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் மழை வாய்ப்பு 



காற்றின் சுழற்சியால், நாளை முதல், தென் மாவட்டங்களுக்கு, மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று, வறண்ட வானிலை நிலவும். வளிமண்டலத்தில், 1 கி.மீ., உயரம் வரை ஏற்படக்கூடிய காற்றின் சுழற்சியால், நாளை, தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அதேபோல, வரும், 21, 23ம் தேதிகளில், தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post