தேர்தலில் போட்டியிட ஆசிரியர்களுக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அரசு 



உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவை சேர்ந்த ஏ.என்.அனுராக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 


இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘அரசு உதவி பெறும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் @தேர்தலில் போட்டியிட தடை விதித்த கேரள ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்ததுடன், மனு தொடர்பாக கேரள அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்


.

Post a Comment

Previous Post Next Post