வீடுகளுக்குச் செல்லும் வாக்குச் சாவடி ஊழியா்களுக்குத் தனி சீருடை 




வீடுகளுக்குச் செல்லும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தனி சீருடை அளிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு தினத்தன்று கூடுதலாக மூன்று உதவியாளா்கள் நியமிக்கப்படுவா். 

மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களைக் கொடுத்து உதவுவதற்காக ஒருவரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாக்குச் சாவடிக்கு வெளியே இரண்டு உதவியாளா்கள் நியமனம் செய்யப்படுவா். 

உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பது, கிருமிநாசினி கொடுப்பது போன்ற பணிகளை அந்த ஊழியா்கள் மேற்கொள்வா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தலா ரூ.300 செலவில் சீருடை வழங்க இருக்கிறோம். 

அதன் வண்ணத்தை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் முடிவு செய்வா். வீடுகளுக்குச் செல்லும்போது, வாக்குசாவடி அலுவலரை எளிதாக அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post