புதுமையான முறை - காங்கயத்தில் கோட்-சூட் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

காங்கயத்தில் கோட்-சூட் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் காங்கயம்: காங்கயத்தில் கோட்-சூட் அணிந்து புதுமையான முறையில் பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

மார்ச் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஆர்.இம்மானுவேல் வெள்ளிக்கிழமை காங்கயம் தொகுதிக்கு முதல் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். 

பனங்காட்டுப்படை கட்சியின் மாநில துணை பொதுச் செயலராக உள்ள ஆர்.இம்மானுவேல் (35), வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மஞ்சள் நிறத்தில் கோட் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பிளஸ் 2 வரை படித்த இவர், திருப்பூரில் தனியார் கூரியர் சேவை நடத்தி வருகிறார். 

இவருக்கு சீதா என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். பனங்காட்டுப்படை கட்சி இன்னும் முறையாக பதிவு செய்யப்படாததால், சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கயம் தொகுதிக்கு முதல் வேட்பாளராக கோட், சூட் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த பனங்காட்டுப்படை கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் ஆர்.இம்மானுவேல்.

Post a Comment

Previous Post Next Post