இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி
இந்திய குடிமைப் பணி தேர்வு
பயிற்சி மையம்) சார்பில் குடிமைப் பணிகளுக்கான
முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாண
வர்களுக்கான பயிற்சி இணைய வழி வகுப்புகள்,
யுடியூப் சேனல் வழியாக நடைபெறுகின்றன.
இது
குறித்து அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி
மையத் தலைவர் இறையன்பு அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 54 ஆண்டுகளாக
செயல்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணி
தேர்வு பயிற்சி மையம் குடிமை பணிகளில் தமிழக
இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால்
அதனை சரி செய்யும் நோக்கில், தமிழக இளை
ஞர்கள் பயன்பெறும் வகையில் குடிமைப் பணிக்
கான முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட உள்ளன.
மேலும், இந்த வகுப்புகள்
இணைய வழியாகவும், யுடியூப் சேனல் மூலமாகவும்
நடத்தப்பட்டுவருகின்றன. தினமும் காலை, 10.15
முதல், 11.30 மணி; 11.45 முதல், 1.00 மணி; பகல், 2.00
முதல், பிற்பகல், 3.15 மணி; மாலை, 3.30 முதல், 4.45
வரை, நான்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த
வகுப்புகள் முதல்நிலை பாடத்திட்டம் அடிப்படை
யில் இந்திய வரலாறு, தேசிய விடுதலைப் போராட்
டம், புவியியல், அரசியல், பொருளாதாரம், அறி
வியல், சுற்றுச் சூழல், நடப்பு நிகழ்வுகள் போன்ற
தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள
ஆர்வமுள்ள மாணவர்கள், இணையவழிவகுப்புகள்
அல்லது AICSCC TN என்ற யுடியூப் சேனல் மூலமாக
பயிற்சி பெறலாம்.
இதன் மூலம் தமிழகத்தின் எந்த
மூலையில் உள்ளவர்களும், நேரடி பயிற்சி வகுப்பு
களுக்கு போக முடியாதவர்களும், வேலைக்கு செல்
பவர்களும், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும்
பயன்பெறலாம். &என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment