தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையில் அதிகாரி பணி 
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள '197 தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

பணியிடங்கள் விவரம்

1. Assistant Director (Horticulture): 28 இடங்கள். 
சம்பளம்: 156,100-1,77,500. 
தகுதி: தோட்டக்கலை பாடத்தில் எம்எஸ்சி. 

2. Horticultural Officer: 169 இடங்கள். 
சம்பளம்: 137,700- 1,19,500. 
தகுதி: தோட்டக்கலை பாடத்தில் பிஎஸ்சி. 

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்குமான வயது வரம்பு: 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடை யாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: 

7200 இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் வகுப்பினர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. 

ஒருமுறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ₹150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது போட்டோ, கையெழுத்து மற்றும் தேவையான சான்றுகளையும் ஸ்கேன் செய்து பதிவேற் றம் செய்ய வேண்டும். 

விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரின்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:& 4.3.2021. 


Post a Comment

أحدث أقدم