முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: புது பட்டியல் வெளியீடு 


 அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஜன.6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு ஜன.20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post