கொரோனா குறைகிறது என சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது : அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் 

 உலக நாடுகள் கொரோனாவின் 2ஆவது, 3ஆவது அலைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது என சாதாரணமாக எண்ணிவிடாமல், அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

 சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள புதிதாக 60 நடமாடும் மருத்துவக் குழு, 100 கொசு ஒழிப்பு வாகன தெளிப்பான்கள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்த அவர், இதனை தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post