தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் 


வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்துள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். மேலும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதன் படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். 

 அதிகமாக முத்துப்பேட்டையில் 10 செ.மீ மழையும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post