காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகை - DSE செயல்முறைகள்!!! 

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பினை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு. 

ஒரு மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்தும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்தும், அவ்வாறு தேர்வு செய்யப்படும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சன்றிதழும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.20,000/-ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பார்வை 2-ல் காணும் அரசாணையில் 2023-2024 ஆம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகையினை வழங்கும் பொருட்டு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ. 1,72,14,000/-னை செலவினம் மேற்கொள்ள பார்வை 3-ல் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முகமுக உதவி அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேவைப்படும் தொகை ரூபாய் 1.72,14,000/- னை பார்வை 4-ல் காணும் கடிதத்தின்படி சென்னை-6, கல்லூரிச்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் RTGS மூலமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வங்கிக் கணக்கில் இணைப்பில் கண்டுள்ளவாறு அவர்களின் பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதுஎனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது வங்கிக் கணக்கில் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வைக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. 

என்பதனை உறுதிப்படுத்திக் வரவு கொள்ளுமாறு இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு காமராஜர் விருதுக்கான பரிசுத்தொகையினை உடனடியாக வழங்குமாறும், பரிசுத்தொகை வழங்கப்பட்ட விவரங்களினை பதிவு செய்ய, பதிவேடு ஒன்றினை தயார் செய்து அதில் கீழ்கண்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post