அரசு வேலை வாய்ப்புகளில் எந்தெந்த பட்டப்படிப்புகள், எந்த பட்டப்படிப்புக்கு இணையானது என்பது குறித்து, இணை கல்விக்குழு கூடி ஆராய்ந்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இணை கல்விக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், உயர்கல்வித்துறை அரசாணை ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. 

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:- கொல்கத்தா மாநிலம் மேற்கு வங்க பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, அரசு வேலை வாய்ப்புகளில், பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு இணையானது. 

அதேபோல், பி.இ. பட்டப்படிப்புடன் பி.எட் (இயற்பியல், அறிவியல்) முடித்தவர்கள், பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post