கார்னர் தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 450 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

 பணியிடங்கள் விவரம்: 
சீசனல் பில் கிளர்க்-150, 
சீசனல் சீசனல் ஹெல்பர்-150 
சீசனல் வாட்ச்மேன் 150 
எனமொத்தம் 450 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

 கல்வி தருதி: 

பில்கிளர்க்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அறிவியல் / வேளாண்மை / என்ஜினியரிங்உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 

மதுரையை சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

* ஹெல்பர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 
* வாட்ச்மேன் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். 

மூன்று பணியிடங்களுக்குமே மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 

சீசனல் பில் கிளர்க்: 18 முதல் 37 வயது வரை 
சீசனல் ஹெல்பர்: 18 to 34 வயது வரை சீசனல் 
வாட்ச்மேன்: 18 to 32 வயது வரை 

சம்பளம்: 
சீசனல் பில் கிளர்க்: 5,285 DA 
சீசனல் ஹெல்பர்: 5,218/- DA 
சீசனல் வாட்ச்மேன்: 5,218/- + DA 
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு தேர்வர்கள் 
அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணியிடங்கள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். கல்வி மதிப்பெண் பட்டியலுக்கு 50% மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 50% மதிப்பெண் என்ற அடிப்படையிலும், பருவகால காவலர்களுக்கு 100% மதிப்பெண்களும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

 இப்பணியிடங்கள் நெல்கொள்முதல் தொடர்பானதும், முற்றிலும் தற்காலிகமானதாகும். 

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 10.02.2025 ஆகும். 
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2025 @ 05.00 PM . 
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி: 
துணை ஆட்சியர் / மண்டலமேலாளர். த.நா.நு.பொ.வா.கழகம், லெவல் 4 பில்டிங், 2-வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், -625-002,


Post a Comment

Previous Post Next Post