தமிழக சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கையின்போது, அரசு செயல்படுத்திவரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா? தகுதியுடைய பயனாளிகள் யாரும் விடுபட்டுவிட்டனரா? என்பதை கண்டறியவும் மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த, பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இம்மாதம் 12-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை 3 நாள்களுக்கு வழங்கப்படும். பயிற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசுத்துறைகளில் இருந்து 25 அலுவலர்கள் தமிழ்நாடு அரசினால் அனுப்பப்பட்டுள்ளனர். இது தமிழ்நாடு அரசின் வரலாற்றிலேயே முதல் முறையாக அமைந்துள்ளது. 

இவர்கள், முதல்-அமைச்சரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை, வணிகவரித் துறை, சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை ஆகிய துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post