மாநில அரசு தணிக்கைத்
துறையால் தணிக்கை மேற்கொள்ளப்படும் தணிக்கை நிறுவனங்களின் தணிக்கைத் தடைகளை
நிவர்த்தி செய்தல் உயர்மட்டக் குழுக்களை அமைத்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
மேலே
படிக்கப்பட்ட கடிதத்தில், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையில் மாவட்ட உயர்மட்டக்
குழு மற்றும் மாநில உயர்மட்டக் குழு என இரண்டடுக்கு உயர்மட்டக்குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தலைமை தணிக்கை இயக்குநர் பதவியானது
ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாரியங்கள் நீங்களான இதர நாணிக்கை நிறுவனங்களுக்கு
மூன்றடுக்கு உயர்மட்டக் குழுக்கள் (மாநில அளவிலான, துறைசார் அளவிலான (ம) மாவட்ட
அளவிலான) நிரந்தரமாக அமைக்கவும் வாரியங்களின் (பொது நிறுவனங்கள்) தணிக்கையானது
சென்னையில் இயங்கும் துணை இயக்குநர் தணிக்கை அலுவலங்களின் தணிக்கை வரம்பிற்குள்
வருவதால் மாவட்ட குழு நீங்கலாக இரண்டடுக்கு உயர்மட்ட குழுக்கள் (வாரியம் (ம)
மாநிலம்) ஏற்படுத்தும் வகையில் இக்கருத்துரு அனுப்பப்படுவதாகவும் தலைமை தணிக்கை
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2. மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் தணிக்கைத்
தடைகள் நீக்கம் செய்வதற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கை துறையில் கடைப்பிடிக்கக் கூடிய
நடைமுறைகள் குறித்து பின்வரும் அரசாணைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தலைமை தணிக்கை
இயக்குநர் தெரிவித்துள்ளார். 1. அரசாணை (நிலை) எண்.324, ஊரக வளர்ச்சி (சி3)த் துறை,
நாள்.13.11.1997 2. அரசாணை (நிலை) எண்.1, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் (பேரூ2) துறை, நாள்.04.01.2007 3. அரசாணை (நிலை) எண்.156. நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.5(2) ) துறை, நாள் 15.12.2023
3. மேலும், மாநில அரசு
தணிக்கைத் துறையால் தணிக்கை மேற்கொள்ளப்படும் தணிக்கை நிறுவனங்களின் நிலுவை
தணிக்கைத் தடைகள் / எதிர்காலத்தில் எழுப்பக்கூடிய தணிக்கைத் தடைகள் /
எதிர்காலத்தில் மாநில அரசு தணிக்கைத் துறைக்கு ஒப்படைக்கப்படும் தணிக்கை
நிறுவனங்களின் தணிக்கையின் போது எழுப்பப்படும் தணிக்கை தடைகள் ஆகியவற்றை உரிய
விதிமுறைகளைப் பின்பற்றி நீக்கம் செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சி தலைவரை தலைவராகக்
கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்ட குழு. துறைசார் / வாரிய அளவிலான அலுவலர்கள் அடங்கிய
உயர்மட்ட குழு மற்றும் நிதித் துறை செயலாளரை தலைவராகக் கொண்ட மாநில அளவிலான
உயர்மட்ட குழுக்களை கீழ்கண்டவாறு அமைத்திட தலைமை தணிக்கை இயக்குநர் அரசினை
கோரியுள்ளார்
1. மாவட்ட ஆட்சி தலைவரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு
- (சென்னை மாவட்டம் நீங்கலாக) i. மாவட்ட ஆட்சித் தலைவர் ii. iii. iv. V. - தலைவர்
மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை (தொடர்புடைய மண்டலம்) -
உறுப்பினர் எந்த துறையின் தணிக்கைத் தடைகள் எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ
பரிசீவனைக்கு அத்துறையின் இணை இயக்குநர் பதவியின் தகு நிலைக்கு ஈடான அலுவலர் அல்லது
அப்பதவியினை விட உயர் பதவியில் உள்ள அலுவலர் - உறுப்பினர் உதவி இயக்குநர், மாநில
அரசு தணிக்கைத் துறை - உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்}
தொடர்புடைய துறையின் மாவட்ட உயர் அலுவலர் - உறுப்பினர் 2. துறைசார்/வாரிய அளவிலான
உயர்மட்டக் குழு-(சென்னை மாவட்டம் உட்பட) 1. II. தலைமை தணிக்கை இயக்குநர் தலைவர்
நடைகள் எந்த துறையின்/வாரியத்தின் தணிக்கைத் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள
உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அத்துறையின் தலைவர்/ வாரியத்தின் உறுப்பினர் செயலர்/தலைமைச்
செயல் அலுவலர்/ மேலாண்மை இயக்குநர் – உறுப்பினர் III. இயக்குநர், மாநில அரசு
தணிக்கைத் துறை - உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்}
3. மாநில
அளவிலான உயர்மட்டக் குழு i. நிதித்துறைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளரால்
அனுமதிக்கப்படும் இந்திய ஆட்சிப் பணி நிலை கொண்ட உயர் அலுவலர் - தலைவர் ii. எந்த
துறையின்/வாரியத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்n தணிக்கைத் தடைகள்
உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அத்துறையின் அரசு செயலாளர் - உறுப்பினர்தலைமை தணிக்கை இயக்குநர் -
உறுப்பினர் எந்த துறையின் தணிக்கைத் தடைகள் எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ
பரிசீலனைக்கு அத்துறையின் தலைவர்/ வாரியத்தின் உறுப்பினர் செயவர்/தலைமைச் செயல்
அலுவலர்/ மேலாண்மை இயக்குநர் - உறுப்பினரி இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை -
உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்}
4. தலைமை தணிக்கை இயக்குநரின்
கோரிக்கையினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, மாநில அரசு தணிக்கைத்
துறையால் தணிக்கை மேற்கொள்ளும் தணிக்கை நிறுவனர்களின் நிலுவை தணிக்கை தடைகள் /
எதிர்காலத்தில் எழுப்பக்கூடிய தணிக்கைத் தடைகள் /எதிர்காலத்தில் மாநில அரசு
தணிக்கைத் துறைக்கு ஒப்படைக்கப்படும் தணிக்கை நிறுவனங்களின் தணிக்கையின் போது
எழுப்பப்படும் தணிக்கை தடைகள் ஆகியவற்றை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நீக்கம்
செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான குழு. துறைசார்/ வாரிய அளவிலான அலுவலர்கள்
அடங்கிய உயர்மட்ட குழு மற்றும் மாநில அளவிலான உயர்மட்ட குழு என மூன்று அடுக்கு
குழுக்களை மேலே பத்தி -1- ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைக்க முடிவு செய்து.
அண்ணனாரே ஆணையிடுகிறது.
5. மாவட்ட உயர்மட்ட குழு, துறைசார் / வாரிய அளவிலான உயரமட்ட
குழு மற்றும் மாநில உயர்மட்ட குழுக்களின் எல்லை (Terms of Reference) ஆகியவை
இவ்வரசாணையின் பின்இணைப்பு -1-ல் இணைக்கப்பட்டுள்ளது.
6. பொது - தணிக்கை அறிக்கை
வெளியிடும் அலுவலரின் கடமைகள் / பொறுப்புகள் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்கள்
ஆகியவை இவ்வரசாணையின் பின் இணைப்பு -2-ல் இணைக்கப்பட்டுள்ளது. த.உதயச்சந்திரன்,
(ஆளுநரின் ஆணைப்படி) அரசு முதன்மைச் செயலாளர். பெறுநர் தலைமை தணிக்கை இயக்குனர்
(மு.கூ.பொ ) / இயக்குநர் உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை பேராசிரியர் க. அன்பழகன்
மாளிகை 6-வது தளம், நந்தனம் சென்னை-35 இயக்குனர் மாநில அரசு தணிக்கைத் துறை
பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை 6-வது தளம், நந்தனம் சென்னை-35 நகல் அரசு முதன்மைச்
செயலாளர் அவர்களின் முதுநிலை முதன்மை தனிச் செயலர், நிதித் துறை சென்னை-09
இருப்புக் கோப்பு / உதிரி நகல் //ஆணைப்படி அணுப்பப்படுகிறது.:/ S. Munatel பிரிவு
அலுவலர்,
No comments:
Post a Comment