பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு

பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாணவ, மாணவியர் விண்ணப்பிக் கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளி யிட்ட அறிக்கை: கரூர் மாவட் டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள். ரியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற் படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்புக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் பெற விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு இளங்கலை பட் டப்படிப்பு மாணவர்களுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந் தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்க ளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இவர்கள், littps://umis.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக் கலாம். வரும் பிப்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, கல்வி உதவித் தொகை பெறுபவர்கள், நடப் பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங் கப்படும். மேலும் விபரங் களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post