பாரம்பரிய மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

 பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவர் பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள் ளன. 

தற்போது உதவி மருத்துவ அதி காரிகள் நிலையில் சித்தாவில் 26 பணியிடங்களும், ஆயுர்வேதத் தில் 2 பணியிடங்களும், யுனானி யில் 1 பணியிடமும் காலியாக உள்ளன. 

அரசு மருத்துவமனைகள் மற் றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அந்தப் பணியிடங்கள் மருத்துவபணியாளர் தேர்வுவாரி யம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியான நபர்கள் மார்ச் 4-ஆம் தேதி வரை mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post