குல்ஷன் குமார் என்ற மாற்றுத்திறனாளி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல்
செய்துள்ளார். அதில், வங்கித்தேர்வு எழுத தனக்கு பதிலாக மாற்றுநபர்
வைத்துக்கொள்ளவும், நேர இழப்பீட்டை ஈடு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கவும்
கோரியுள்ளார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா,
ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 40 சதவீத உடல்
குறைபாடு இருப்பதாக அரசு அதிகாரி அளிக்கும் சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளி
மட்டும்தான் தேர்வுக்கு மாற்றுநபரை பயன்படுத்தலாம் என்ற விதிமுறை உள்ளது.
அந்த
கட்டுப்பாடு இல்லாமல், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தேர்வுக்கு மாற்றுநபரை
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மத்திய அரசு
ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வு அமைப்புகளும், அதிகாரிகளும்
சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

إرسال تعليق