பள்ளிக் கல்வி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை - 2024-25 - அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவிலான "மகிழ் முற்றம்" குழுக்களுக்கிடையேயான குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு -வினாடி-வினா போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகள் - சார்பு 


தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினமான 14.11.2024 அன்று "மகிழ் முற்றம்" (குழு அமைப்பு) திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே வலுப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, நடைமுறையில் உள்ள அமைப்பு குழு மூலம் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டிகளை வளப்படுத்தும் நோக்கில், பிப்ரவரி 13, 2025 அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டியை நடத்துவதற்கு பார்வை 2 இல் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாடி வினா போட்டி கீழ்க்கண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அமையும்

Post a Comment

أحدث أقدم