புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் இணையதள செய்தி விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2025 மாலை 5.45 மணி புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்

1. பல் மருத்துவர் (Dentist) : 

காலிப்பணியிடம்: 2 (பரம்பூர் மற்றும் காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்) கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.D.S., பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். (Tamil Nadu Dental Council Registration) முன்அனுபவம்: குறைந்தது 1 ஆண்டு முன்அனுபவம் (Minimum 1 Year Experience) பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.34,000- தகுதியான வயது: விண்ணப்பதாரரின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

2. வட்டார கணக்கு உதவியாளர் ( Block Account Assistant ) : 

காலிப்பணியிடம்: 2 (அண்டக்குளம் மற்றும் கடியாப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்) கல்வித்தகுதி : B.Com., Degree with Tally Certificate mandatory. தகுதியான வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.16,000- வழங்கப்படும். 

3. கதிர்ப்பட பதிவாளர் (Radiographer] : 

காலிப்பணியிடம் : (இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மணமேல்குடி மற்றும் விராலிமலை அரசு மருத்துவமனைகள்) கல்வித்தகுதி: As per MRB noms (2 Years Diplamo Course in Radio Diagnosis Technology (or) B.Sc., Radiography in recognized University) தகுதியான வயது: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.13,300- வழங்கப்படும்.

4. கணினி பகுப்பாயர் (System Analysist / Data Manager) : 

காலிப்பணியிடம் : 1 (புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) கல்வித்தகுதி: 1. Masters in Disability rehabilitation administration (MDRA) approved by rehabilitation council of India (RCI) basic qualification in DPT (Bachelor in Physiotherapy), BOT (Bachelor of Occupational Therapy), BPO (Bachelor in Prosthetic and Orthotics), B.Sc., Nursing and other RCI recognized Degrees, 2. A Post Graduate degree / Diploma in Hospital Health Management from a recognized reputed intuitions with one year relevant experience for diplamo holders, 3. An MBA Degree from a recognized intuition with two year experience in Hospital / Health Programme தகுதியான வயது: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.13.750- வழங்கப்படும். 

மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை 622001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.02.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயற்செயலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், புதுக்கோட்டை. மாவட்ட ஆட்சித் தலைவர், தலைவர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை.





Post a Comment

أحدث أقدم