கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே மாணவ-மாணவிகளுக்கு பாலியல்
தொந்தரவு கொடுக்கும் சம்பவம் அண்மை காலங்களாக அதிகரித்து வருவது வேதனையை
ஏற்படுத்துகிறது. அதிலும் சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி ஒருவருக்கு 3
ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம்
எடுத்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த சம்பவங்களுக்கெல்லாம்
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை
இதுபோன்ற பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களின் பட்டியல்களை சேகரித்து, அவர்கள்
மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை
ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த
துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? பாதுகாப்பற்ற
சூழலில் உள்ளீர்களா? உடனே 14417 என்ற உதவி எண்ணுக்கு அழையுங்கள்'' என்று
மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி பள்ளிகளிலும் தீவிரமாக
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
إرسال تعليق