425 மருந்தாளுநர் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர்
பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு
திங்கள்கிழமை (பிப்.17) முதல் தொடங்க உள் ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகா
தார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு
வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதியான நபர்கள் மார்ச் 10-ஆம் தேதி வரை
mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக் கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500, மற் றவர்களுக்கு
ரூ.1,000 விண்ணப்பக் கட்ட ணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடு தல் விவரங்களுக்கு
மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தை அணுக லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق