பொறியியல் மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொடர்பான இன்டர்ன்ஷிப் பயிற்சிஅளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. 
பொறியியல் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையம், உற்பத்தி தொழில்நுட்பத்துறை மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியல் துறை ஆகியவை இணைந்து ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் தொடர்பான இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்க உள்ளன. 

இந்த 2 வார கால பயிற்சியில் பொறியியல் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் சேரலாம். பயிற்சியானது எம்ஐடி வளாகத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறும். முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதில் சேர விரும்பும் மாணவர்கள் https://forms.gle/EvTDP4R1ZrkuS8FV6 என்ற இணைப்பை பயன்படுத்தி பிப்ரவரி 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு அதுகுறித்த தகவல் பிப்ரவரி 21-ம் தேதி மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

أحدث أقدم