செய்திக்குறிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.02.2025 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. 
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 25,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000-த்திலிருந்து ரூ.25,000 வரையிலும் மற்றும் தகுதிக்கேற்ப கூடுதலாகவும் ஊதியம் வழங்கப்படவுள்ளதாக வேலையளிப்போரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று தங்களது தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். 
விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று. குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகலுடன் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர். திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post