1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.07.2025 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 1:40 என்ற ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, 2012-2013-ஆம் கல்வியாண்டில் அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ.9300-34800+ரூ.4800/- தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் 1591 கூடுதுல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்தும், மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்காண் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடவாரியான பட்டியல் மற்றும் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாரியான பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 
2. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்காணும் 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.11.2021 முதல் 31.10.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணையிடப்பட்டது. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.11.2024 முதல் 31.01.2025 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், இப்பணியிடங்களுக்கு 01.02.2025 முதல் 31.07.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மேற்குறிப்பிட்டுள்ள 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.02.2025 முதல் 31.07.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

4. இக்கடிதம், फ्रान. 22.10.2022-அரசாணை(நிலை) எண்.334 நிதி(சம்பளம்) துறை, துறைச் அதிகாரப்பகிர்வின்படி வெளியிடப்படுகிறது. செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள

Post a Comment

Previous Post Next Post