அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க் கைப் பணிகளை மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்க
வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்
வித்துறை இயக்குநர் பூ.ஆ. நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும்
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள் ளிகளில் 2025-2026-ஆம்
கல்வியாண்டில் மார்ச் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும்.
அதன்படி 5 வயது நிறைந்த குழந்தைகள் அனை வரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்து இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த குடியிருப்புக
ளில் உள்ள அரசுப் பள்ளிக ளில் சேர்ப்பதற்கான நடவடிக் கைகளை மாவட்டக் கல்வி
அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர 2025-2026-ஆம் கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில்து அதிகரிக்கும் வகையில் வட்டாரக் கல்வி
அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும்
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய அறி வுரைகளை வழங்கி சேர்க்கை பணிகளை
சிறந்த முறையில் நடத்த வேண்டும்.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், இணையதள வசதி, கையடக்க கணினி உள்பட
பல்வேறு வச திகள் ஏற்பட்டுத்தப்பட்டுள் அதேபோல், தமிழக அர சின் நலத்திட்டங்கள்,
உதவித் தொகைகள் குறித்த விழிப்பு ணர்வை பெற்றோருக்கு ஏற்ப டுத்தி மாணவர் சேர்க்கையை
மேற்கொள்வதற்கும் நட டிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு வழி
காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பின்பற்றி மாண வர் சேர்க்கையை மேற் கொள்ள
அனைத்து பள்ளி களின் தலைமையாசிரியர்க ளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment